லாட்டரி மார்ட்டின் குடும்பம்: 3 பேர், 3 கட்சி, 3 தொகுதி - பரபரப்பு தகவல்

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின்.
லாட்டரி மார்ட்டின் குடும்பம்: 3 பேர், 3 கட்சி,  3 தொகுதி - பரபரப்பு தகவல்
Published on

சென்னை,

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின். இவரது மனைவி லீமா ரோஸ். இந்த தம்பதிக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்ற மகனும், டெய்சி மார்ட்டின் என்ற மகளும் உள்ளனர். டெய்சி மார்ட்டின் தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி ஆவார்.

இந்நிலையில், லாட்டரி மார்ட்டின் மனைவி, மகன், மருமகன் ஆகிய 3 பேரும் சட்டசபை தேர்தலில் 3 கட்சிகளில் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியில் (ஐஜேகே) இருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். லீமா ரோஸ் அதிமுக மகளிர் அணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அதிமுக வேட்பாளராக லீமா ரோஸ் களமிறங்கியுள்ளார். லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் களமிறங்கியுள்ளார்.

அதேபோல், லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரி பாஜகவில் இருந்தார். பின்னர் பாஜகவில் இருந்து விலகிய ஜோஸ் சார்லஸ் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சி புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அமைந்துள்ளது.

இந்த கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் 2 தொகுதியை லட்சிய ஜனநாயக கட்சிக்கு பாஜக ஒதுக்கியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் ஆகிய 2 தொகுதிகள் லட்சிய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், காமராஜர் நகர் வேட்பாளராக ஜோஸ் சார்லஸ் போட்டியிடுகிறார்.

அதேபோல், லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

இதன் மூலம் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் 3 பேர், 3 கட்சிகளில் 3 தொகுதிகளில் களமிறங்கியுள்ளனர்.

அதிமுக - லீமா ரோஸ் (லால்குடி)

லட்சிய ஜனநாயக கட்சி (பாஜக கூட்டணி) - ஜோஸ் சார்லஸ் (காமராஜர் நகர்)

தவெக - ஆதவ் அர்ஜுனா (வில்லிவாக்கம்)

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com