லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோசுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோசுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு
Published on

சென்னை,

கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின். இவரது மனைவி லீமா ரோஸ். இவர் தவெக தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார்.

இதனிடையே, லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணைப்பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், 14 ஆண்டுகளாக ஐஜேகே கட்சியில் பணியாற்றியபோதும் கட்சியின் தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று கூறி அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார்.

இதையடுத்து, லீமா ரோஸ் கடந்த 17ம் தேதி அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் இணைந்த லீமா ரோசுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, லீமா ரோஸ் அதிமுக மகளிர் அணி இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,

அதிமுக மகளிர் அணி இணைச்செயலாளர் பொறுப்பில் லீமா ரோஸ் மார்ட்டின் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக உடன்பிறப்புகள் அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com