

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிற்றரசன்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் மேள தாளங்கள் முழங்க ஏராளமான பெண்கள் பூஜை பொருட்களுடன், மாவிளக்கு ஏந்தியபடி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
மழை வேண்டி மாரியம்மனுக்கு மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுப்புற ஊர்களில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.