மதுராந்தகம்: 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்

செப்.25-ம் தேதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்-அமைச்சர் விஜய்.
 முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம்
மதுராந்தகம்:
Published on

சென்னை,

மதுராந்தகத்தில் செப்.25, அக்.2 ஆகிய 2 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார் முதல்-அமைச்சர் விஜய்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில், முதல்வரின் மதுராந்தகம் தொகுதி பிரசார தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மது​ராந்​தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகு​தி​களுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது.

தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இதற்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த செப். 9 ஆம் தேதியில் தொடங்கி செப். 16 ஆம் தேதி​யுடன் முடிவடைந்​தது. இந்த இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில், முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் செப்.25 மற்றும் அக்.2ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

செப்.25இல் மதுராந்தகம் தொகுதி அச்சரப்பாக்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். அக்.2ஆம் தேதி மதுராந்தகத்தில் சாலைவலம் செல்லும் முதல்-அமைச்சர் விஜய் வாகனத்தில் இருந்தபடியே பிரசாரம் மேற்கொள்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com