
சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிக இடங்களை வென்ற த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
உள்கட்சி பூசல் காரணமாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) உள்ளிட்ட 6 எம்.எல். ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து த.வெ.க.வில் சேர்ந்தனர்.
இதேபோல் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பத வியை ராஜினாமா செய்தார். இதனால் 7 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. கோர்ட்டு வழக்கு காரணமாக மற்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.