மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.
மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

மதுராந்தகம் - தாராபுரம் தொகுதியின் இடைத்தேர்தலில் சிபிஎம், சிபிஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெ.சண்முகம் மற்றும் மு. வீரபாண்டியன் அறிவித்துள்ளனர்

5 முனை போட்டி

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் போட்டியிடுகிறது.

வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் வேட்பாளர்களை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கூட்டாக அறிவித்துள்ளனர். அதன்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ப. லட்சுமணனும், மதுராந்தகம் தொகுதி வேட்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சுகந்தியும் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com