மதுரை: உசிலம்பட்டி பகுதியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்னல்
Published on

மதுரை,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பருத்தி தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்று உள்ளனர்.

அப்போது, அந்த மரத்தில் மின்னல் பாய்ந்ததில், மரங்களின் அருகே நின்று கொண்டிருந்த கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர்.

மருத்துவமனையில் சிகிச்சை

ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெறுபவர் வாசியம்மாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி ஆகிய மூவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com