மதுரை: ரெயில்வே மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சமயத்தில், அதன் அருகே இருந்த கடையில் 2 பேர் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
மதுரை: ரெயில்வே மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து
சுற்றுச்சுவர்
Published on: 

மதுரை,

மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் உள்ள ரெயில்வே மண்டபத்தின் சுற்றுச்சுவர் இன்று காலை திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த 2 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்தது எப்படி?

மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் பகுதி எப்போதும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த நுழைவுவாயில் அருகே உள்ள ரெயில்வே மண்டபத்தின் சுற்றுச்சுவர் இன்று (புதன்கிழமை) காலை எதிர்பாராத விதமாக திடீரென இடிந்து விழுந்தது.

டீ குடித்து கொண்டிருந்த 2 பேர் காயம்

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சமயத்தில், அதன் அருகே இருந்த கடையில் 2 பேர் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். சுவரின் இடிபாடுகள் அவர்கள் மீது விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

சம்பவம் குறித்து தகவலறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X