மதுரை ஆதீனம் பயணித்த கார் விபத்து; அதிர்ச்சி சம்பவம்

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நாளை நடைபெற உள்ளது
மதுரை ஆதீனம் பயணித்த கார் விபத்து; அதிர்ச்சி சம்பவம்
Published on

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நாளை நடைபெற உள்ளது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

இதில், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியர்கள், சைவசமய அறிஞர்கள், அசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைவ மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து மதுரை ஆதீனம் இன்று காரில் சென்னை புறப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது மதுரை ஆதீனம் பயணித்த கார் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, விபத்துக்குள்ளான காரிலேயே மதுரை ஆதினம் சென்னை புறப்பட்டார்.

மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட சதி, கார் சேதமடைந்தபோதும் இறை அருளால் மதுரை ஆதினம் உயிர் தப்பினார் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தியுள்ளார். மதுரை ஆதினம் பயணித்த கார் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com