அமித்ஷா வருகை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு


அமித்ஷா வருகை: மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 Jun 2025 11:32 AM IST (Updated: 7 Jun 2025 1:08 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது

மதுரை

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு தேர்தல் வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அதேவேளை, சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. - அ,தி.மு.க. கூட்டணி உறுதியாகியுள்ளது.

இதனிடையே, பா.ஜ.க. மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று இரவு 8.30 மணிக்கு மதுரை வருகிறார். அவர் இன்று இரவு சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் நாளை காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். மாலை 3 மணியளவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.

இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 1,000 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் போலீசாரின் தணிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story