மதுரை: சைக்கிளை பற்களால் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை

35 கிலோ எடை கொண்ட இரும்பு சைக்கிளை, அவர் கைகளைப் பயன்படுத்தாமல் தனது பற்களால் மட்டுமே கவ்விப் பிடித்தார்.
சைக்கிளை பற்களால் தூக்கியபடி 100 அடி நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை
ராணுவ வீரர்
Published on

மதுரை,

பற்களால் சைக்கிளை கவ்வி பிடித்து முன்னாள் ராணுவ வீரர் செய்த சாதனை அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தனது அசாத்திய உடல் பலத்தை நிரூபிக்கும் வகையில் விநோத சாதனை முயற்சி ஒன்றில் ஈடுபட்டார்.

35 கிலோ எடை

பொதுவாக மனிதர்கள் கைகளால் தூக்குவதற்கே திணறும் 35 கிலோ எடை கொண்ட இரும்பு சைக்கிளை, அவர் கைகளைப் பயன்படுத்தாமல் தனது பற்களால் மட்டுமே கவ்விப் பிடித்தார். சைக்கிளை பற்களால் கவ்வித் தூக்கியவாறே, சற்றும் தடுமாறாமல் 100 அடி தூரத்திற்கு நேராக நடந்து சென்று அவர் சாதனை படைத்தார்.

பாராட்டு மழை

முன்னாள் ராணுவ வீரரின் இந்த அசாத்தியமான பற்களின் உறுதியையும், உடல் வலிமையையும் நேரில் பார்த்த திருமங்கலம் பொதுமக்கள் கைதட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த வியத்தகு சாதனை வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com