மதுரை: திருமலை நாயக்கர் மகாலை 25-ந் தேதி வரை இலவசமாக பார்க்க அனுமதி

திருமலை நாயக்கர் மகாலை கட்டணம் இல்லாமல் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை: திருமலை நாயக்கர் மகாலை 25-ந் தேதி வரை  இலவசமாக பார்க்க அனுமதி
Published on: 

மதுரை,

திருமலை நாயக்கர் மகாலை கட்டணம் இல்லாமல் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

உலக மரபு வார விழா

உலக மரபு வார விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நாளை (சனிக்கிழமை) பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற உள்ளது.

மதுரையின் வரலாற்று நினைவுச்சின்னங்கள் என்ற தலைப்பில் நடக்கும் இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசும் மற் றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்படும்.

திருமலை நாயக்கர் மகால்

மேலும், வருகிற 25-ந் தேதி வரை திருமலை நாயக்கர் மகாலை கட்டணம் இல்லாமல் சுற்றிப்பார்க்க பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். விழாவின் முதல் நாளான நேற்று தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக மகாலை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

X