

மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்தவர் சீனிராஜ் மனைவி தீபலட்சுமி (வயது 42). இவர் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று தீபலட்சுமி அரசு ஆஸ்பத்திரிக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.
திருமங்கலம் தீயணைப்பு நிலையம் அருகே சென்றபோது பின்னால் மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் திடீரென தீபலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.