மதுரை ஐகோர்ட்டில் வழக்கு முக்கிய ஆவணங்கள் மாயம் - நீதிமன்ற ஊழியர் உட்பட 3 பேர் கைது

முக்கிய ஆவணங்கள் மாயம் தொடர்பாக நீதிமன்ற ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஐகோர்ட்டில் வழக்கு முக்கிய ஆவணங்கள் மாயம் - நீதிமன்ற ஊழியர் உட்பட 3 பேர் கைது
Published on

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் வழக்கின் ஆவணங்களை பாதுகாக்க கூடிய அறையில் இருந்து முக்கிய ஆவணங்கள் மாயமாகியுள்ளன. இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் நீதிமன்ற ஊழியர் ஜான்சன், பாலமுருகன், பிரித்விராஜ் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com