பொது இடங்களில் அனுமதி இல்லா சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அரசு பொது இடங்களில் அனுதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலை கட்டுமானங்களை, வருவாய்த்துறை அகற்ற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் அனுமதி இல்லா சிலைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Published on

மதுரை,

அரசு பொது இடங்களில் அனுதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலை கட்டுமானங்களை, வருவாய்த்துறை அகற்ற வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தஞ்சையே சேர்ந்த வைரகதிரேசன் என்பவர், பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அவர் அளித்த மனுவில், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சிலைகளின் அருகில் இருக்கும் ஏணிகளை அகற்றவும், அங்கீகரிக்கப்படாத சிலைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவி பானர்ஜி, நீதிபதிகள் சுந்தரேஷ் அமர்வு, பொது இடங்கள் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் உள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டனர்.

இதில் அரசியல் மற்றும் மதம் சார்ந்தவையாக இருந்தாலும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அனுமதியற்ற சிலைகள் மற்றும் கட்டுமானங்கள் அகற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அரசு தரப்பில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com