மதுரை: நடிகர் ரஜினி கோவிலில் 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்

கோவிலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக இன்று தொழிலாளர் தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
மதுரை:  நடிகர் ரஜினி கோவிலில் 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்
Published on

மதுரை

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் நடிகர் ரஜினிகாந்துக்காக தனியாக கோவில் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. ஸ்ரீ அருள்மிகு ரஜினி கோவில் என பெயரிடப்பட்ட அந்த கோவிலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக இன்று தொழிலாளர் தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

அப்போது பால், மஞ்சள், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு ரஜினிகாந்தின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பஸ் கண்டக்டராக இருந்து தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக வளர்ச்சியடைந்த அவரை கவுரவிக்கும் வகையில், ரசிகர் கார்த்திக் என்பவர் இந்த கோவிலை கட்டியுள்ளார்.

அதில், 3 அடி உயர கற்சிலையும் உள்ளது. ரசிகர்கள், அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அந்த கோவிலில், பல்வேறு இந்து கடவுள்களின் உருவம் போன்று ரஜினிகாந்த் முகத்துடன் கூடிய கடவுள்களின் உருவங்கள் இடம் பெற்றுள்ளதுடன், அவர் பல்வேறு படங்களில் நடித்த தோற்றங்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com