மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்
Published on: 

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இடைத்தேர்தல்

இதனையடுத்து இந்த 2 தொகுதிகளுக்கும் இன்று (அக்டோபர் 6) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேலும், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்பட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், தாராபுரத்தில் தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானு மதி, திமுக சார்பில் சுகன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன் உள்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தொடக்கம்

இந்நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. மதுராந்தகத்தில் 285 வாக்குச்சாவடிகளிலும், தாராபுரத்தில் 320 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 306 வாக்காளர்களும் உள்ளனர்.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

மதுராந்தகம், தாராபுரத்தை போன்று புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com