

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101. தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 2026 – வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை பாதுகாப்பாக வைத்தல். இது தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தின் 35. மதுராந்தகம் (தனி) மற்றும் 101. தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 09.10.2026-ஆம் நாளன்று இரண்டு வாக்கு எண்ணும் மையங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள்/ தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணுகை முகவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. வாக்கு எண்ணுகை நடைமுறையின்போது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும்/தேர்தல் முகவர்களும் வாக்கு எண்ணுகையிட முகவர்கள் இருந்தனர். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் கண்காணிப்புக் கேமரா (CCTV) மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பின்கீழ், வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளிலிருந்து (VVPATs) அவற்றின் சீட்டுகள் (VVPAT Slips) வெளியே எடுக்கப்பட்டு, சட்டப்படியாக ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்காக கருப்பு நிற உறைகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் காப்பறையில் பாதுகாப்பாக வைப்பதற்கு முன்னர், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளன.
தேர்தல் வழக்குகளின்(Election Petitions) பட்டியலை சென்னை ஐகோட்டு இறுதி செய்யும் வரையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறையின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஒருவேளை தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், தேர்தல் வழக்குகள் இறுதியாக தீர்வு செய்யப்படும் வரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.