மகா சிவராத்திரி: தமிழகம் முழுவதும் 1,360 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மகா சிவராத்திரியையொட்டி தமிழகம் முழுவதும் 1,360 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மகா சிவராத்திரி: தமிழகம் முழுவதும் 1,360 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகா சிவராத்திரி (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) 125 பஸ்களும், 13-ந் தேதி வெள்ளிக்கிழமை 500 பஸ்களும், 14-ந் தேதி சனிக்கிழமை 505 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13-ந் தேதி வெள்ளிக்கிழமை 55 பஸ்களும், 14-ந் தேதி சனிக்கிழமை 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து 13-ந் தேதி மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 20 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com