ஹலோ எப்.எம்.மில் இரவு முழுவதும் நடந்த மகாசிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள்...!!

ஹலோ எப்.எம்.மில் இரவு முழுவதும் நடந்த மகாசிவராத்திரி கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஹலோ எப்.எம்.மில் இரவு முழுவதும் நடந்த மகாசிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகள்...!!
Published on

சென்னை,

மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே, மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. நேற்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்

இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஹலோ எப்.எம்.மில் சிவார்ப்பணம் என்ற தலைப்பில் மகாசிவராத்திரி கொண்டாட்டம் சிறப்பு தொடர் நிகழ்ச்சி ஒலிபரப்பு நேற்று இரவு தொடங்கி இன்று காலை 7 மணி வரை ஒலிபரப்பாகின.

அதன்படி, இரவு 10:30 முதல் மறுநாள் அதிகாலை 1:30 மணி வரை, சிறப்பு ஒலிச்சித்திரம் இடம்பெற்றது. அதில் சிவபெருமானின் பெருமை சொல்லும் திருவிளையாடல் திரைப்படம் ஒலிபரப்பாகியது.

அதைத்தொடர்ந்து சித்தமெல்லாம் சிவமயம்' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளர்கள் சுகி சிவம், முனைவர் கு.ஞானசம்பந்தன், முனைவர் சாரதா நம்பிஆரூரன், தேசமங்கையர்க்கரசி மற்றும் இசையே இறைவன் என்ற தலைப்பில் கர்நாடக இசை கலைஞர்கள் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், ஒ.எஸ்.அருண், சிக்கில் குருசரண், காயத்ரி கிரீஷ், மஹதி ஆகியோரும் பங்கேற்று பக்தி பரவசமாக உரையாடினர்.

மேலும் நான்கு கால பூஜைகள், திருவிளையாடல் ஒலிச்சித்திரம், சொற்பொழிவுகள், சிவாலய குருக்கள் அருள்வார்த்தைகள், கர்நாடக இசைக்கலைஞர்களின் பாடல்கள், தேவாரப்பதிகங்கள் என்று இரவு முழுவதும் இசையோடும் இறைவழிபாட்டோடும் இணைந்த நிகழ்ச்சிகள் தற்போது 7 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் தற்போது லட்சக்கணக்கான மக்கள் சிவன் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மக்கள் பக்தியுடன் சிவபெருமானை வழிபாட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com