மகாவீர் ஜெயந்தி: கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் இயங்க தடை..!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாவீர் ஜெயந்தி: கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் இறைச்சி கடைகள் இயங்க தடை..!
Published on

கோவை,

மகாவீர் ஜெயந்தி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து மதுபான கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் (04.04.2023) இறைச்சி கடைகள் இயங்க தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com