மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31-ம் தேதி மதுபான கடைகளை மூட நெல்லை கலெக்டர் உத்தரவு

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் அனைத்து மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்களை மூட வேண்டும்.
மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31-ம் தேதி மதுபான கடைகளை மூட நெல்லை கலெக்டர் உத்தரவு
Published on

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு ஆணை எண்: 708, பொது (பல்வேறு) துறை, நாள்: 11.11.2012 மற்றும் அரசு ஆணை எண்: 1, உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (VI) துறை, நாள்: 3.1.2012 ஆகியவற்றின் படியும்; தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கடித எண்: ஆர்3/118/2024, நாள்: 5.3.2026-ன் படியும், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31.3.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் அனைத்து மதுபானக் கடைகளும் (FL1 உரிமங்கள்) மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்களும் (பார்கள்) மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், தங்கும் விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் அன்றைய தினம் முழுமையாக மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. விதியை மீறி யாரேனும் மதுபானங்களை விற்பனை செய்ய முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com