

சென்னை,
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் இந்து மயான பூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் வேலங்காடு, அரும்பாக்கம் மற்றும் ஜி.கே.எம். காலனி மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட எம்.டி.எச். சாலையில் உள்ள வில்லிவாக்கம் இந்து மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், 04.09.2026 முதல் 28.09.2026 வரை மேற்கண்ட மயானபூமி இயங்காது.
எனவே, பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகிலுள்ள நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானபூமி, அண்ணாநகரில் உள்ள அரும்பாக்கம் மயானபூமி மற்றும் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள ஜி.கே.எம். காலனி மயானபூமி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.