பராமரிப்பு பணி: கோவை- நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு காரணமாக ரெயில் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.
பராமரிப்பு பணி: கோவை- நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம்
Published on

கோவை,

கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 16322) காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. தண்டவாள பராமரிப்பு காரணமாக இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 8, 10, 12 ஆகிய தேதிகளில் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது.

கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பகுர், கொடுமுடி, புகலூர், கரூர் பாளையம் மற்றும் எரியோடு ஸ்டேஷன் வழியாக இந்த ரெயில் இயங்காது. மாற்று ரெயில் நிலையங்களாக போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக இந்த ரெயில் பராமரிப்பு நாட்களில் மட்டும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com