மக்காச்சோளம் விலை உயர்வு

மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளது.
மக்காச்சோளம் விலை உயர்வு
Published on

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் பறித்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மக்காச்சோள மாவு தயாரிக்கும் மில்களுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com