சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்

சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது வாக்கை செலுத்தினார்.
சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும், விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இன்று காலையிலேயே சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசனும் உடன் வந்து, வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com