சென்னை விமான நிலையத்தில் மலேசிய விமானம் ரத்து - பயணிகள் வாக்குவாதம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் மலேசிய விமானம் ரத்து - பயணிகள் வாக்குவாதம்
Published on

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் செல்ல 320 பயணிகள் அனைத்து பரிசோதனைகளையும் முடித்துவிட்டு தயாராக காத்து இருந்தனர்.

ஆனால் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானம் வரவில்லை. இதனால் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நீண்டநேரமாகியும் விமானம் புறப்படுவது குறித்து அறிவிப்பு செய்யாததால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் வரவில்லை. இதனால் அந்த விமானம் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர். விமானம் ரத்து செய்யப்பட்டதால் மலும் ஆத்திரம் அடைந்த பயணிகள், தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று விமான நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பயணிகள் மாற்று விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் 12 மணி நேரம் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com