ஆண் பிணம்

கூடங்குளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
ஆண் பிணம்
Published on

கூடங்குளம்:

கூடங்குளம் அருகே பெருமணல் கிராமத்தை அடுத்த பஞ்சல் கடற்கரையில் நேற்று காலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார். இதுகுறித்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com