நிழற்குடையில் ஆண் பிணம்

பெரியகுளம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள நிழற்குடையில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
நிழற்குடையில் ஆண் பிணம்
Published on

பெரியகுளம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள நிழற்குடையில் நேற்று முன்தினம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அந்த உடலை அருகில் இருந்த நாய்கள் கடித்து குதறின. இதைக்கண்ட பொதுமக்கள் அந்த நாய்களை துரத்தினர். பின்னர் அவர்கள் தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தென்கரை கிராம நிர்வாக அலுவலர் சோனை தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com