முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

திருக்கோவிலூர் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
Published on

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர்-செவலை ரோட்டில் தனியார் மனைப்பிரிவில் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகனுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் இது பற்றி அவர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இறந்தவரின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அவர் இறந்து 10 முதல் 15 நாட்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தொயவில்லை.இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவரை யாரேனும் கொலை செய்து உடலை புதரில் வீசி சென்றனரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com