மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள்: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து
Published on

சென்னை,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 84-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மதிப்பிற்குரிய மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலப் பணிகளைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட எனது உளமார்ந்த வாழ்த்துகள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com