நெல்லையில் 8.3 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

நெல்லை மாநகரம் மணிக்கூண்டு பகுதியில் பாளையங்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நெல்லையில் 8.3 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணிக்கூண்டு பகுதியில் பாளையங்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுயம்புலிங்கம் (வயது 52) என்பவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 8.325 கிலோ எடையுடைய 37 புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன நபரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com