கோவில்பட்டியில் வாளுடன் சுற்றித் திரிந்தவர் கைது

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி, கண்மாய்க்கரை அருகே ஒருவா கையில் வாளுடன் இருப்பதாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கோவில்பட்டியில் வாளுடன் சுற்றித் திரிந்தவர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி, கண்மாய்க்கரை அருகே ஒருவா கையில் வாளுடன் இருப்பதாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு கையில் வாளுடன் நின்றபடி, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக கோவில்பட்டி ஆசிரமம் தெருவை சேந்த கருப்பசாமி மகன் சிங்கராஜை (வயது 56) போலீசார் கைது செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com