நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது

நெல்லை தச்சநல்லூர், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது
Published on

நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தங்ககணபதி (வயது 48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆயுள் தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பின்னர் அவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான மூக்கன்(50) என்பவரும் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூக்கன் தனது வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து தங்ககணபதியை வெட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தங்ககணபதியின் தம்பியான விவசாயி முத்துகுமரன்(46) ஆத்திரமடைந்து அரிவாளுடன் மூக்கன் வீட்டுக்கு சென்றார். அங்கு மூக்கனுக்கும், முத்துகுமரனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் முத்துகுமரன் அரிவாளால் மூக்கனை வெட்டினார். படுகாயம் அடைந்த 2 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுமரனை கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com