தூத்துக்குடியில் முகம் சிதைந்த நிலையில் ஆண் கொடூர கொலை


தூத்துக்குடியில் முகம் சிதைந்த நிலையில் ஆண் கொடூர கொலை
x

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு, சத்யா நகர் உப்பளம் அருகே ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு, சத்யா நகர் உப்பளம் அருகே ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் திருமுருகன் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 45 வயது இருக்கும். முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் டவுன் ஏ.எஸ்.பி. மதன் பார்வையிட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story