தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீரென இறந்தார்.
தொழிலாளி திடீர் சாவு
Published on

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை புதுக்காலனி தெருவை சேர்ந்த தொழிலாளி மதியழகன் (வயது46). சம்பவத்தன்று இவர் வயல் வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது தண்ணீர் குடிக்க அருகில் இருந்த பம்புசெட்டுக்கு சென்றபோது அங்கு திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மதியழகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் மதியழகன் மனைவி ராணி (40) புகார் செய்தார். அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com