முதியவரிடம் செயின் பறித்தவரை மடக்கி பிடித்தவர்; நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு

தச்சநல்லூர், மதுரை சாலையில் நடந்து சென்ற முதியவரிடம் பைக்கில் வந்த நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.
முதியவரிடம் செயின் பறித்தவரை மடக்கி பிடித்தவர்; நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு
Published on

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை சாலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில், அப்பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த தச்சநல்லூர், மங்களாகுடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் பேச்சிமுத்து என்பவர், பைக்கில் வந்து முதியவரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்தார்.

இதனையடுத்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன், பேச்சிமுத்தை நேரில் அழைத்து, அவரது துணிச்சலை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்வின்போது நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம் கலந்து கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com