ரேசன் ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு

ரேஷன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேசன் ஊழியர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கெரேனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மற்ற பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் போதுமான முகக்கவசம், கையுறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த மண்டல பதிவாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com