மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.31½ லட்சம்

மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 மற்றும் 320 கிராம் பவுன், 450 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.31½ லட்சம்
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோவில் வளாகத்தில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் சலுத்திய காணிக்கை எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.31 லட்சத்து 66 ஆயிரத்து 363 மற்றும் 320 கிராம் பவுன், 450 கிராம் வெள்ளி செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் திறப்பின் போது கோவில் பரம்பரை தர்மகர்த்தா மணலி சீனிவாசன், கோவில் துணை கமிஷனர் கவெனிதா மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். உண்டியலில் காணிக்கை என்னும் பணி நடந்தபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com