வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த மனிஷா ராமதாஸ் - ஆதவ் அர்ஜுனா பாராட்டு

மனிஷா ராமதாஸ், தனது மனது உறுதியாலும் அசாத்தியமிக்க ஆற்றலாலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
aathav arjuna praises
Published on: 

சென்னை,

வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்த மனிஷா ராமதாசுக்கு தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையர் மனிஷா ராமதாசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘எலைட்’ திட்டத்தில் பயன்பெற்று வரும் மனிஷா ராமதாஸ், தனது மனது உறுதியாலும் அசாத்தியமிக்க ஆற்றலாலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை பெறும் மனிஷா ராமதாஸ் , மேலும் பல உலக சாதனைகள் படைக்க எனது பாராட்டுகள்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com