மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார்: அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்

கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் விவகாரம் தொடர்பாக மனோ தங்கராஜ் - அனிதா ராதாகிருஷ்ணன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன்
Published on

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரை தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ. ஆகியோர் சமீபத்தில் சந்தித்து, 'கனிம வளங்களை எடுத்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்' என்று கடிதம் கொடுத்தனர். இதனை விமர்சித்து முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், 'வீடியோ' வெளியிட்டார்.இந்த நிலையில் சென்னை வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ண னிடம், இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

ஆட்சியரிடம் கோரிக்கை

நான், நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது 400 லாரிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. அங்குள்ள டிரைவரிடம், எதற்கு இவ்வளவு லாரிகள் நிற்கிறது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், முறைப்படி எல்லா ஆவணங்கள் இருந்தும் லாரிகளை மடக்கி வைத்துள்ளார்கள் என்று தெரிவித்தனர். எனவே அவர்களுக்கு குரல் கொடுப்பதற்காக உள்ளூர் எம்.எல்.ஏ. ஆஸ்டினை அழைத்துச்சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து, இந்த தொழிலை சரியாக செய்கிறவர்களுக்கு எந்த அரசாங்கமும் தடை விதிக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தேன்.

அப்போது இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, கேரளாவும் இந்தியாவில்தானே இருக்கிறது. அது என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. கனிம வளங்களை கொண்டு செல்லவில்லை என்றால் நாகர்கோவிலில் இருப்பவர்கள் எப்படி கட்டி டங்கள் கட்டுவார்கள். இதற்குதான் குரல் கொடுத்தோம். சகோதரர் மனோதங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com