தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை

நாசரேத்- ஆழ்வார்திருநகரி இடையே தண்டவாளத்தில் ரெயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை
Published on

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்-ஆழ்வார்திருநகரி இடையே தண்டவாளத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற ரெயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும். மஞ்சள் நிற சட்டை அணிந்துள்ளார். அவர் யார்? ரயில் முன் பாய்ந்து தற்கெலை செய்து கெண்டாரா? தண்டவாளத்தை கடக்க முயன்றபேது ரயில் மேதி இறந்தாரா? அல்லது மரணத்திற்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com