மார்ச் 16: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,61,429 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,43,423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 561 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,556 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 352 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,39,483 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4,182 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,84,13,572 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 64,193 கொரோனா மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,80,94,766 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 64,006 பேருக்கு கொரோனா பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 5,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5,20,367 பேர் ஆண்கள் (இன்று-498 பேர்), 3,41,027 பேர் பெண்கள் (இன்று-369 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com