சிறுமிக்கு திருமணம்: வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு

பெரியகுளம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 3 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சிறுமிக்கு திருமணம்: வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்கு
Published on

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 23). இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றார். பின்னர் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே கர்ப்பிணியான அந்த சிறுமிக்கு கடந்த 21-ந் தேதி பரியகுளம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. விசாரணயில் திருமண வயதை எட்டாத அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த சிறுமி பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கருப்பையா, சிறுமியின் தந்தை ஆதீஸ்வரன், தாய் பாண்டியம்மாள் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com