மதுவில் விஷம் கலந்து குடித்து கொத்தனார் தற்கொலை

கடலூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.
மதுவில் விஷம் கலந்து குடித்து கொத்தனார் தற்கொலை
Published on

கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் தியாகராஜன் (வயது 37), கொத்தனார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவியுடன் விவாகரத்து ஆன நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு சாமுண்டீஸ்வரி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தியாகராஜன், கடந்த சில நாட்களாக குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தியாகராஜன், மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி தியாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com