சென்னை போரூரில் மரப் பலகை கடையில் பயங்கர தீ விபத்து

தீ விபத்து ஏற்பட்ட உடனே கடையில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சென்னை போரூரில் மரப் பலகை கடையில் பயங்கர தீ விபத்து
Published on

சென்னை,

சென்னை போரூர் எம்.எஸ் சாலையில் அமைந்துள்ள மரப் பலகை மற்றும் மரச்சாமான்கள் விற்கும் கடையில், இன்று காலை ஊழியர்கள் பணியில் இருந்தபோது ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடையில் பிளைவுட் பலகைகள், மரக்கட்டைகள் மற்றும் ஒட்டும் பசைகள் இருந்ததால், நொடிப் பொழுதில் தீ கடை முழுவதும் மளமளவென பரவியது.

விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள், ரசாயனக் கலவை மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட உடனே கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரப் பலகைகள், பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின. மேலும் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்து காணப்படுகிறது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com