தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை உறுதி: கனிமொழி எம்.பி.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்கள் இந்தத் துயரிலிருந்து மீண்டு வரவும் எப்போதும் துணையாக இருப்போம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை உறுதி: கனிமொழி எம்.பி.
Published on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு, குற்றவாளியைக் கைது செய்த தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கனிமொழி எம்.பி. பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதவில், "இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிக்கு மிகக் கடுமையான உச்சபட்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவர்கள் இந்தத் துயரிலிருந்து மீண்டு வரவும் எப்போதும் துணையாக இருப்போம்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதைச் சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் உறுதிப்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com