

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொது (பல்வகை) துறை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண்.154 பொது (பல்வகை)த் துறை நாள்: 03.09.2020-ன்படி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா 10.05.2026 பிற்பகல் தொடங்கி 11.05.2026 பிற்பகல் வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு எதிர்வரும் 11.05.2026 திங்கள்கிழமை அன்று ஒருநாள் மட்டும் "உள்ளூர் விடுமுறை” அளித்தும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 23.05.2026 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், 11.05.2026 திங்கள்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலகங்கள் அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.