இன்னல் இருள் மறைந்து இன்ப ஒளி நிறையட்டும் - அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து

போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னல் இருள் மறைந்து இன்ப ஒளி நிறையட்டும் - அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து
Published on: 

சென்னை,

வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாளை தீபாவளிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தீப ஒளித் திருநாள் வாழ்த்து!

இன்னல் இருள் மறைந்து இன்ப ஒளி நிறைய தீப ஒளி வகை செய்யட்டும்!

வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்ச்சியானவை; அனைவராலும் விரும்பப்படுபவை. அத்தகையக் கொண்டாட்டங்களில் தீப ஒளிக்கு சிறப்பான இடம் உண்டு. தீபஒளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும். புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொளுத்தி, பிற மத நண்பர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் இனிப்பு வழங்கும் வழக்கம் நட்பை வலுப்படுத்துவதுடன், நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்கிறது. இது தான் தீப ஒளித் திருநாளின் சிறப்பு ஆகும்.

மக்கள் கொண்டாடும் அனைத்து திருநாள்களுக்கும் ஒரு வரலாறு உண்டு. தீமையை நன்மை அழித்ததன் கொண்டாட்டம் தான் தீப ஒளித் திருநாள் என்று கூறப்படுகிறது. அந்த வரலாற்றின்படி தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளித் திருநாளாக அமைய வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து இன்னல்களையும் போக்கி, வாழ்வை வண்ணமயமாக்கும் வகையில் அனைத்து நன்மைகளையும் தீப ஒளி திருநாள் வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாகும்.

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் இப்போது எதிர்கொள்ளும் வறட்சி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எல்லா சிக்கலும் இன்றுடன் கரைய வேண்டும். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறைய வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X