இந்திரா காந்தியின் புகழும் நினைவும் என்றும் நிலைத்திருக்கட்டும்! - மாணிக்கம் தாகூர்

மாபெரும் தலைவரின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
Published on: 

சென்னை,

இந்திரா காந்தியின் புகழும் நினைவும் என்றும் நிலைத்திருக்கட்டும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி பிறந்தநாள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியாவின் இரும்புப் பெண்மணி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில், அவரை அன்புடனும் மரியாதையுடனும் நினைவுகூர்கிறேன்.

இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை, மதச்சார்பின்மை மற்றும் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் அன்னை இந்திரா காந்தி.

நினைவும் என்றும் நிலைத்திருக்கட்டும்

வங்கிகளை தேசியமயமாக்கல், பசுமைப் புரட்சி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர்.

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக தனது உயிரையே தியாகம் செய்த அந்த மாபெரும் தலைவரின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இந்திரா அம்மாவின் புகழும் நினைவும் என்றும் நிலைத்திருக்கட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X